×

இங்கி. ராணி எலிசபெத்துக்கு பெல்ஜியம் கல்லில் கல்லறை

லண்டன்: இங்கிலாந்து ராணி 2ம் எலிசபெத்தின் பெல்ஜியம் கற்களால் கட்டப்பட்ட கல்லறை புகைப்படம் வெளியிடப்பட்டு உள்ளது. இங்கிலாந்து ராணி 2ம் எலிசபெத், கடந்த 8ம் தேதி இறந்தார். அப்போது அவருக்கு 96 வயது.  70 ஆண்டுகளாக இங்கிலாந்தின் ராணியாக இருந்து   இவர் சரித்திரம் படைத்தார். அவருடைய  மறைவுக்கு பின்னர் ராணியின் மூத்த மகனான 3ம் சார்லஸ் அரசர் பொறுப்பேற்று உள்ளார். ராணி எலிசபெத்தின் இறுதிச் சடங்குகள் சில நாட்களுக்கு முன் நடந்தது.  

அவருடைய உடல் புதைக்கப்பட்ட  கல்லறையின் புகைப்படத்தை பக்கிங்காம் அரண்மனை வௌியிட்டுள்ளது. ராணியின்  கல்லறை மன்னர் 4ம் ஜார்ஜ்  நினைவு பேராலாயத்தில்  அமைந்துள்ளது. கல்லறை முழுவதும் பளபளப்பான பெல்ஜிய கல்லால் கட்டப்பட்டுள்ளது. மேலும், கல்லறையின் கல்லில் இங்கிலாந்து ராணியின் பெயர், அவரது கணவர் பிலிப் மற்றும் ராணியின் பெற்றோரின் பெயர்களும் எழுதப்பட்டுள்ளன. ராணியின் தந்தையான 6ம் மன்னர் ஜார்ஜின் கல்லறையும் இதே இடத்தில்தான்  உள்ளது.


Tags : Ing. Tombstone ,Belgium ,Queen Elizabeth , Ing. Tombstone in Belgium for Queen Elizabeth
× RELATED புரோட்டான் பீம் தெரபி பற்றிய பயிற்சி...